நான் நல்ல பாண்டியன். நல்ல தேவன் என் பெயர். பாண்டியனின் சேனாதிபதியாக இருந்ததால் நல்ல பாண்டியன் என்பார்கள். 6 மாதங்களுக்கு முன் இதே போல ஒரு நாளில்தான் தோத்தா கிழவன் இறந்தார். . பொழுது சாயும் நேரம், புகார் கடற்கரையில் கடலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்.
கடலின் அலைகளைப் போல என் மன அலைகளும் வேகம் கொண்டன. கண்கள் கலங்க கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். காரணம் கடலிற்கும் எனக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளது. கரை தொட்டு மீண்டும் கடலிற்குத் திரும்பும் அலைகளோடு வாருங்கள் என் பழைய கடல் வாழ்க்கைக்குச் செல்வோம்.
இந்து மகா சமுத்திரத்தின் ஆர்ப்பாட்டமான மாலை நேரம். சூரியன் மெல்ல மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். சமுத்திரத்தின் ஆர்ப்பாட்டத்தையும் சூரியனின் அழகையும், மேகங்களின் வர்ண ஜாலங்களையும் ரசித்தவாறு கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் வீரத்தேவன். கழுகுத் தேவன் என்று அழைப்பார்கள். காரணம் இந்தக் கப்பலின் பெயர் கடற்கழுகு.
இதன் தலைவன் நான். என் பெற்றோர் யார் என்பது எனக்குத் தெரியாது. நான் அனாதையாக கலிங்க வீதிகளில் அலைந்த போது ராஜசிம்மன் என்ற இந்தக் கப்பலின் தலைவன் என்னை எடுத்து வளர்த்தார். எப்போது அவர் என்னை மகனாக ஏற்றுக் கொண்டாரோ அப்போதே என் கடற்பயணமும் ஆரம்பித்து விட்டது. அவர் என்னை மகனாக வளர்ப்பதை விட ஒரு நல்ல வீரனாக வளர்ப்பதில்தான் அக்கறை கொண்டார். அதனால் சிறு வயது முதல் கடற்சண்டைகள், கப்பல் செலுத்தும் முறைகள், நாடுகளின் அமைப்பு, காற்றின் திசைகள் என அனைத்தும் சொல்லித்தந்தார்.
என் 19,20 ஆவது வயதில் மிகச் சிறந்த கடற் கொள்ளையனாகத் திகழ்ந்தேன். ஆம் நான் ஒரு கடல் கொள்ளையன். என் வளர்ப்புத் தந்தை ஒரு கடற் கொள்ளைக்காரத் தலைவர். வளர்ப்பால் நான் கடற் கொள்ளையனாக இருந்தாலும் என் தோற்றம் அரச வம்சத்தவர்களைப் போல இருக்கும். நெடிய உயரமும், பரந்த மார்பும், இறுகிய கைகளும், நீண்ட தலை முடியும், முறுக்கு மீசையும், பொது நிறமும் என்னைப் பார்ப்பவர்களை நான் ஒரு அரச குமாரன் என்று நினைக்கத் தூண்டிவிடும். சில காலம் செல்ல என்னை கப்பலின் உப தலைவன் ஆக்கினார் தந்தை. நானும் அதற்கேற்றால் போல் அனைத்து கடற் சண்டைகளிலும் வெற்றி வாகை சூடி பொன்னையும் பொருளையும் குவித்தேன்.
சில வேளைகளில் பொன்னோடு சேர்த்து பெண்களும் மாட்டிக் கொண்டு விடுவார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஒன்றுமே செய்ய மாட்டோம். இதுதான் மற்றைய கடற் கொள்ளையர்களில் இருந்து எம்மை வேறு படுத்திக் காட்டியது. பெண்களுக்கு விருப்பம் இல்லாவிடின் நம் கை விரல் கூட அவர்கள் மீது படக்கூடாது என்பது என் தந்தை எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.எனக்கு மட்டுமல்ல கப்பலின் அனைத்து வீரர்களுக்கும்தான்.எனக்கு 25 வயது இருக்கும் போது அந்தத் துயரச்சம்பவம் நடை பெற்றது.
எமக்கும் வேறு கடற் கொள்ளையர்களுக்குமிடையில் ஆதிக்க யுத்தம் நடைபெற்றது. அதில் நாம் வெற்றி பெற்றாலும் என் தந்தை மரணமடைந்து விட்டார். அன்றிலிருந்து நான் கப்பலின் தலைவனாக மாறினேன். என் கப்பலை மாற்றியமைத்தேன். 700 அடி நீளமான என் கப்பலில் 40 பீரங்கிகள் பொருத்தினேன். கப்பலின் வேகத்தை அதிகரிப்பதற்காக 10 பாய்களை அமைத்தேன். கப்பலின் ஆள் வலிமையை 150 பேர் ஆக்கினேன். அதன் பின்னர் என் கப்பலின் பெயரைக் கேட்டாலோ என் பெயரைக் கேட்டாலோ அனைவரும் நடுநடுங்குவர். எனக்கு நண்பர்களாக கருப்புபாண்டியும், மாறத்தேவனும் கிடைத்தார்கள்.
சிறந்த வீரர்கள். அதனால் அவர்களை என் தளபதிகள் ஆக்கிக் கொண்டேன். சிக்கலான சமயங்களில் என் தந்தையின் நண்பர் தோத்தா கிழவனிடம் ஆலோசனை கேட்பேன். அவருக்கு அப்போது 65 வயது ஆகியிருந்தது. இருந்தாலும் எங்களோடே கடற்பயணங்களில் ஈடுபட்டிருந்தார். என் தந்தை ராஜசிம்மனை விட அதிக பாசம் காட்டியவர். என் 28 ஆவது வயதில் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஒன்று ஏற்பட்டது. நீண்ட கடற் பயணத்தின் பின் கப்பலை பழுது பார்ப்பதற்காகவும் வெடிமருந்துகள் வாங்குவதற்காகவும் கப்பலை பேய்த்தீவை நோக்கிச் செலுத்தினேன்.வருடத்திற்கு 2. 3 முறைதான் இத் தீவிற்கு வருவேன். அடிக்கடி வர விரும்புவதில்லை.
காரணம் இருந்தது. பேய்த்தீவு நரமாமிசம் உண்ணும் பழங்குடிகள் வாழ்ந்த தீவு. அந்தத் தீவின் மறு பக்கத்தில்தான் கடற் கொள்ளையர்களின் பெரிய துறைமுகம் அமைந்திருந்தது. அனைத்து கடற் கொள்ளையர்களும் தங்கள் கப்பலை பழுது பார்க்கவும் வெடிமருந்துகள், வேறு நாட்டுப் பெண்கள் என எதை வாங்குவதற்கும் இங்குதான் வருவார்கள். பசல்கார் என்ற கொள்ளையன்தான் அப் பகுதியை நிர்வகித்தான். பழங்குடிகளோடு ஒப்பந்தம் செய்து அப் பகுதியை ஆண்டு கொண்டிருந்தான். சாதாரண கப்பல்களோ, வியாபாரக் கப்பல்களோ இந்தப் பக்கம் கூட வராது. ஒவ்வொரு நாள் இரவும் எங்காவது பெண்களில் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அப்படிப் பட்ட பயங்கரமானது இந்தப் பேய்த்தீவு. ஆனால் இத் தீவிற்கு வந்து விட்டால் கொள்ளையர்கள் ஒருவரை ஒருவர் தாக்கக் கூடாது என்பது இத் தீவின் சட்டம். 2 நாள் பயணத்தின் பின் மாலை நேரத்தில் பேய்த்தீவை அடைந்தோம். துறைமுகத்திலும் கடலிலும் பல கொள்ளையர்களது கப்பல்கள் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்தது. என் கப்பலை கடற்க்ரைக்கு சமீபமாக நங்கூரமிட்டேன். அப்போது சற்று தூரத்தில் கடற்கரையில் அரச வம்சத்தவர் பயணம் செய்யும் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிற்பதைக் கவனித்தேன். இந்த இடத்தில் இந்தக் கப்பலுக்கு என்ன வேலை என்று யோசித்துக் கொண்டே தீவுனுள் பிரவேசித்தேன்.
நேராக என் நெருங்கிய நண்பன் பக்ருவின் மாளிகைக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்றான். இருவரும் எங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டோம். பின் வழமை போல கப்பலிற்கு தேவையான பொருட்களின் விபரத்தை அவனிடம் தெரிவித்தேன். ” இரவாகி விட்டதால் நாளை காலை பார்க்கலாம், நீ சென்று நண்பர்களை அழைத்து வா ” என்று சொன்னான். அப்போது அரச வம்சக் கப்பலைப் பற்றிய ஞாபகம் வரவே அதைப் பற்றி அவனிடம் கேட்டேன். ” ஆம் கழுகுத்தேவா…
அது கலிங்க அரச வம்சத்தவர் பயணம் செய்த கப்பல், பாஞ்சாலம் செல்லும் வழியில் துஸ்லாவிடம் மாட்டிக் கொண்டனர், கப்பலின் பொக்கிஷங்களை சூறையாடியவன் அக் கப்பலில் இருந்த கலிங்க இளவரசியின் அழகில் மயங்கி அவளையும் மற்றவர்களையும் இங்கே கொண்டுவந்து விட்டான், மற்றவர்களை கொன்று விட்டான். இளவரசியை இத் தீவின் கிழக்குப் பக்கத்தில் மனித நடமாட்டம் அற்ற ஒரு பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து அதில் சிறை வைத்திருக்கிறான்.
அச் சிறையில் வைத்து தன்னை மணந்து கொள்ளும் படி இளவரசியை வற்புறுத்துகின்றான், வழமையாக தன்னிடம் சிக்கும் பெண்களை சிதைப்பவன் அவன், இளவரசியின் அதிர்ஷ்டம் அவர்களை இன்னும் எதுவும் செய்யவில்லை….” என்றான் பக்ரு. ” ஆனால் கலிங்க நாட்டு படைகளுக்கு இது தெரிந்தால் இத் தீவிற்கே விபரீதமாகிவிடுமே…. அதனால் இளவரசியை சிறை எடுத்தது முட்டாள்தனம் என்று யாரும் சொல்லவில்லையா ” என்று கேட்டேன்.
” கேட்டார்கள்… மரணத்தை தழுவினார்கள், பசல்காரின் நண்பன் துஸ்லா… அதனால் அவனை எதிர்க்க யாரும் பிறகு வரவில்லை ” என்றான் பக்ரு. ” சரி இரவு கவிழ்வதற்குள் நண்பர்களை அழைத்து வந்து விடுகிறேன் ” என்று கூறிவிட்டு கப்பலை நோக்கி வேகமாகச் சென்றேன். அங்கு கடற்கரையில் மாறதேவனும் கருப்புபாண்டியும் தோத்தா கிழவனும் எனக்காக காத்திருந்தனர். ” தாமதத்திற்கு மன்னியுங்கள்… மாறதேவா நம் வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டாயா “என்று கேட்டேன். ” ம்… அப்போதே ஆயிற்று, ஏன் இத்தனை தாமதம் ” என்று கேட்டான் மாறதேவன். போகும் வழியில் அனைத்தையும் விபரமாகக் கூறுகிறேன், இப்போது பக்ருவின் மாளிகைக்கு செல்லலாம் வாருங்கள் என்று மூவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்.
வழியில் அனைத்தையும் விபரமாகக் கூறினேன். பக்ருவின் மாளிகையில் இரவு உணவை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றோம். தூக்கத்திலும் அந்த இளவரசியின் நினைவாகவே இருந்தது. துஸ்லாவை நான் அறிவேன். நரமாமிசம் உண்ணும் மகா முரடன் அவன். அவன் கையில் சிக்கிய இளவரசியை நினைக்க வேதனையாக இருந்தது. நாளை காலை எப்படியாவது இளவரசியைப் பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு உறங்கிப் போனேன். மறுநாள் காலை பக்ருவுடன் கருப்புபாண்டியை கப்பலிற்குத் தேவையான பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு நானும் மாறதேவனும் தீவின் கிழக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.
என் நோக்கம் மாறதேவனுக்கு புரிந்திருக்க வேண்டும். ” நண்பா அவர்களிடம் நம் கப்பலை பழுதுபார்க்க மரங்களை வாங்கச் செல்வதாகத்தானே கூறினாய்….. ஆனால் தற்போது நீ செல்வதைப் பார்த்தால் இளவரசியைப் பார்க்கச் செல்வது போலல்லவா இருக்கிறது…. உண்மையைச் சொல் ” என்று கேட்டான். ” உண்மைதான், முதலிலேயே இளவரசியைப் பார்க்கப் போகிறேன் என்று கூறியிருந்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னைத் தடுத்திருப்பீர்கள், அதனால்தான் உண்மையை மறைத்தேன் ” என்றேன். ” ஆனால் கழுகுத்தேவா இதனால் பல வீண் பிரச்சனைகள் ஏற்படும் ” என்று எச்சரித்தான் மாறதேவன். ” இந்த உருவிலேயே சென்றால்தான் பிரச்சனைகள் ஏற்படும், மாறு வேடத்தில் சென்று சந்தித்தால் எந்த்ப் பிரச்சனைகளும் நேராது ” என்று கூறினேன்.
அதனால் இருவரும் பெண்கள் போல மாறு வேடம் போட்டுக் கொண்டு முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு தொடர்ந்து சென்றோம். சில காத தூரம் சென்றதும் ஒரு குடிசை மட்டும் காட்டுப் பகுதியை அண்மித்து இருப்பதைக் கண்டோம். அக் குடிசையின் வெளியே 10,15 கொள்ளையர்கள் மது அருந்திக் கொண்டும், போதையில் பாடிக்கொண்டும் இருந்தனர். அக் குடிசையில்தான் இளவரசி சிறை வைக்கப் பட்டிருக்கிறாள் எனபது தெளிவாகப் புரிந்தது. மெதுவாகச் சென்று குடிசையின் வெளி வாசலை அடைந்தோம். எங்களைக் கண்ட ஒரு கொள்ளையன் ” ஏய் யார் நீங்கள், இங்கு எதற்காக வந்தீர்கள் ” என்று அதட்டினான்.
குரலை மாற்றி பேசக் கூடிய மாறதேவன் ” இளவரசிக்கு பழங்கள் கொண்டுவந்தோம் ” என்று பெண் குரலில் பேசி பழங்களைக் காட்டினான். ” சரி சரி பழங்களை சீக்கிரம் கொடுத்து விட்டு போய்விடுங்கள் ” என்று சொன்னான் அந்தத் தடியன். நாங்கள் குடிசையில் நுழையும் போது அந்தக் கொள்ளையர் கூட்டத்தில் இருந்த ஒருவன் ” வர வர பெண்கள் கூட ஆண்களைப் போல கட்டுமஸ்தானவர்கள் ஆகி விட்டார்கள் ” என்று கூறினான். அதை அடுத்து அந்தக் கூட்டத்தில் இருந்து சிரிப்பொலி பலமாகக் கிளம்பியது. இதையெல்லாம் சட்டை செய்யாமல் குடிசையின் உள்ளே சென்றோம்.
அங்கு ஒரு பெண் சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்தாள். ஆனால் அவளிடம் அரச குமாரி ஒருத்திக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் எதுவும் இல்லாததால் அவள் அரச குமாரி அல்ல என்ற முடிவுக்கு வந்தோம். அப்போது எங்கள் இருவரையும் கண்ட அவள் நீங்கள் யார் என்று கேட்டாள். ” நாங்கள் கலிங்கர்கள், உங்களைக் காப்பாற்ற இங்கு வந்தோம் ” என்று கூறி எங்கள் வேடத்தைக் கலைத்தோம். எங்களைக் கண்டு அவள் அதிர்ச்சி அடைந்தாலும் காப்பாற்ற வந்தவர்கள் என்பதால் கூச்சல் எதுவும் போடாமல் இருந்தாள். பின்னர் குடிசையின் பின் புறம் அழைத்துச் சென்றாள்.
அங்கு எங்களை நிற்கச் சொல்லிவிட்டு சென்று இளவரசியை அழைத்து வந்தாள்இளவரசியைக் கண்டதுமே என் சித்தத்தைப் பறி கொடுத்தேன். மான் போன்ற விழிகள், தாமரை போன்ற செவ்விய உதடுகள், சற்றே பெருத்த முலைகள், கொடி போன்ற இடை, கீழே சற்று அகலமாக அவள் கால்கள், முலைகளின் மேல் கொடி போல இருந்த கருங் கூந்தல் என தேவலோக கன்னிகை போல இருந்தாள். அவளை நான் மேலிருந்து கீழாக ரசிப்பதைக் கண்டு என் கவனத்தை திசை திருப்ப ” யார் நீங்கள் ” என்று கேட்டாள். மெல்ல அவள் அருகில் சென்று அவள் கண்களோடு என் கண்களை உறவாட விட்டு பேச ஆரம்பித்தேன். ” நாங்கள் கலிங்கர்கள், நீங்கள் இங்கு சிறைபட்டு இருப்பதை அறிந்து உங்களை மீட்க வந்தோம் ” என்று கூறினேன்.
அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றோம். என் அருகில் வந்த மாறதேவன் என் தோள்களைப் பிடித்து உலுக்கிய பின்னர்தான் சுய உணர்வை அடைந்தேன். மாற்றான் ஆன என் கண்களோடு உறவாடியதை நினைத்து அவள் கன்னங்கள் சிறிது சிவந்தன. பின் என்னைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தவாறு ” வீரரே அது அத்தனை சுலபம் இல்லை. உங்களைப் போல் முன்னரும் சில வீரர்கள் வந்தனர் ஆனால் துஸ்லாவின் வாளிற்கு இரையாகிப் போனார்கள் ” என்று சொன்னாள். ”
ஆனால் நாங்கள் அவர்களைப் போலல்ல, விரைவில் உங்களைக் காப்பாற்றுவோம் ” என்று சொன்னான் மாறதேவன். ” மகிழ்ச்சி, ஆனால் 7 நாட்களுக்குள் நீங்கள் எங்களைக் காப்பாற்ற வேண்டும் இல்லையேல் அனைத்தும் முடிவடைந்து விடும், இந்த 7 நாட்களுக்குள் இளவரசி அந்த முரடனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒப்புக் கொள்ளாவிடின் 8 வது நாள் இவரை ருசித்து விட்டு பழங்குடிகளுக்கு நரபலியாகக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறான் துஸ்லா ” என்று குரலில் பயம் தொனிக்கக் கூறினாள் இளவரசியின் தோழி. ”
கவலைப்பட வேண்டாம். நாளை காலை இதற்கு ஒரு தீர்வோடு உங்களைச் சந்திக்கிறோம் ” என்று கூறிவிட்டு மீண்டும் மாறு வேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம். பக்ருவின் மாளிகையை நெருங்கியதும் மாறு வேடத்தைக் கலைத்து விட்டுச் சென்றோம். பக்ருவின் வீட்டில் தோத்தா கிழவனும் கருப்புபாண்டியும் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினேன். முதலில் அதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் எனக்கு உதவுவதாக வாக்களித்தனர். பின்னர் பக்ரு வந்தான். அவனிடமும் நடந்ததைக் கூறினேன். ”
உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ” என்று கேட்டான். என் மனதை அவளிடம் பறி கொடுத்ததையும், அவர்களைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்ததையும் சொன்னேன். ஒரு வழியாக அவனும் எனக்கு உதவி செய்வதாகக் கூறினான். அவர்களைக் காப்பாற்றுவதற்கான யோசனையில் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டங்களைச் சொன்னார்கள். நீண்ட யோசனையின் பின்னர் நான் ஒரு திட்டத்தைக் கூற ஆரம்பித்தேன். துஸ்லா உயிரோடு இருக்கும் போது நான் அவளைக் காப்பாற்ற முயற்சி செய்தால், அதனால் பல வீண் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் துஸ்லா இறப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அதிலும் துஸ்லாவை நாம் கொலை செய்தால் பசல்கரும் துஸ்லாவின் வீரர்களும் சும்மா விடமாட்டார்கள். அதனால் இன்று இரவு துஸ்லாவிற்கு எம் வீரன் ஒருவனை அனுப்பி நன்றாக மதுவை குடிக்க செய்வோம். பின் துஸ்லா முழு போதையில் இருக்கும் போது அவனை பழங்குடிகளின் இருப்பிடத்திற்கு அருகில் விட்டு விடுவோம். மீதியைப் பழங்குடிகள் பார்த்துக் கொள்வார்கள். துஸ்லாவின் மரணத்திற்குப் பின் பசல்காரிடம் சென்று வைஷ்ணவி என் காதலி என்பேன். அவன் வைஷ்ணவியிடம் கேட்பான் அவளும் ஆம் என்பாள், அவளும் ஒத்துக் கொண்ட பின் பசல்கர் பிரச்சனை ஏதும் செய்யாமல் இளவரசியை என்னோடு அனுப்பி வைப்பான்.
காரணம் கொஞ்சம் நீதி தெரிந்தவன் பசல்கர். ஒரு வேளை துஸ்லாவின் வீரர்கள் என்னை எதிர்த்தால் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை, பசல்காரே பார்த்துக் கொள்ளுவான். இது தான் என் திட்டம். இதன்படி அனைத்தும் நடந்தால் எல்லாம் வெற்றிதான் என்றேன். என் திட்டத்தை அனைவரும் ஆமோதித்தார்கள். மறுநாள் காலை என் திட்டத்தைச் இளவரசியிடம் சொல்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டேன். இளவரசியைச் சந்தித்தேன். ” இளவரசி உங்களைக் காப்பாற்றுவதற்கான வேலைகளில் இறங்கி விட்டேன்.
ஆனால் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் ” என்றேன். என்னவென்று கேட்டாள். ” வருகின்ற சில நாட்களுக்குள் பசல்காரை அழைத்துக் கொண்டு இங்கு வருவேன், அவன் உங்களிடம் நான் உங்கள் காதலனா என்று கேட்பான்…. நீங்கள் ஆம் என்று சொல்ல வேண்டும் ” என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவள் முகம் நாணத்தால் சிவந்தது. சரியென்று தலையசைத்தாள். அவளிடம் விடை பெற்றுக் கொண்டு கப்பலில் திருத்த வேலைகளை பார்ப்பதற்காகச் சென்றேன். பின் அன்று இரவு என் திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றினேன்.மறுநாள் காலை நான் நினைத்தது போலவே நடந்தது. துஸ்லா அங்கு தன் மன்மதலீலையைக் காட்ட முயற்சி செய்து பிடிபட்டு இருந்தான்.
இனி மேலும் இவ்வாறு நடப்பதைத் தடுக்க பழங்குடிகள் அவனைப் பலி கொடுத்திருந்தார்கள். நண்பனின் மரணத்தால் துவண்டு போயிருந்த பசல்காரின் மாளிகைக்குச் சென்றேன். பசல்காரிடம் இளவரசி வைஷ்ணவி தேவி என்னைக் காதலிப்பதாகச் சொன்னேன். அதைக் கேட்ட அவன் அதிர்ச்சியடைந்தான், நீ என்ன சொல்கிறாய்.. இறந்த என் நண்பன் துஸ்லாவின் காதலி அவள் என்றான். ” பசல்கார் உனக்கு சந்தேகமிருந்தால் நிரூபிக்கிறேன் வா ” என்று அவனை அழைத்துக் கொண்டு இளவரசியின் இருப்பிடத்திற்குச் சென்றேன்.
அங்கு அவளிடம் இவன் உன் காதலனா என்று கேட்டான் பசல்கார். இளவரசியும் ஆம் என்று கூறினாள். ” என்னைச் சந்திப்பதற்காக வந்த வைஷ்ணவியை சிறை பிடித்து இங்கு கொண்டு வந்து விட்டான் உன் நண்பன் துஸ்லா…., இவள் இங்கிருப்பதை அறிந்துதான் நான் இங்கு வந்தேன், இதைப் பற்றி உன்னோடும் துஸ்லாவோடும் பேசுவதற்குள் அவனே தன் முடிவைத் தேடிக் கொண்டு விட்டான்,
இப்போது இவளை என்னோடு அனுப்பி வை, நானே அழைத்துச் சென்றிருப்பேன், துஸ்லாவின் வீரர்களால் பிரச்சனை ஏற்படும், அதைத் தவிக்கத்தான் உன்னை அழைத்து வந்தேன் ” என்று கூறினேன். வேறு எதுவும் பேசாமல் இளவரசியை என்னோடு அனுப்பி வைத்தான் பசல்கர். தடுக்க வந்த துஸ்லாவின் வீரர்களை அடக்கினான். இளவரசியை அழைத்துக் கொண்டு பக்ருவின் மாளிகைக்கு விரைந்தேன். இளவரசியை மீட்டதற்குப் பாராட்டினர்.